Wednesday, April 13, 2011

எனது பொழுதுபோக்கு


பொழுது போக்கு என்பது மூளைக்கும் உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடியதொன்றாகும்.ஒவ்வொருவருடய பொழுதுபோக்கும் அவரவர் நடத்தைகளுக்கேற்ப வித்தியாசமாக அமைகிறது.அதாவது ஒருவருக்கு மிகப் பிடித்த ஒன்று மற்றவருக்கு பிடித்தமில்லாததாக இருக்கலாம்.

மிகவும் உற்சாகத்தைத் தரக்கூடிய பொழுதுபோக்கு ஒருவருடய ஈர்ப்பு,அவதானிப்பு,கவனத்தால் வளர்க்கப் பட்டதாக இருக்கவேண்டும்.அது மனதுக்கும் உடலுக்கும் ஆறுதலளிப்பது பட்டுமல்லாமல் புதிய புதிய அனுபவத்தைக் கொடுக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

எமது வாழ்வில் நடக்கும் பல நிகழ்வுகளை பொழுது போக்காக மாற்றிக் கொள்ளலாம்.ஆனால் அதை மிகவும் யோசித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

வாசித்தல், விளையாடுதல்,வரைதல்,கதை எழுதுதல்,பாடல்கள் படித்தல்,நடனம் ஆடுதல்,விளையாடுதல்,வீட்டை அலங்கரித்தல் போன்றவை சில பொழுது போக்குகளாகும்.

எங்கல் வாழ்வின் இடைவெளியை நிரப்புவதில் பொழுது போக்கும் ஒன்றாகும்.அது எங்கள் ஆண்மாவை உற்சாகப் படுத்தும்.மற்றும் கலை உணர்வை வளர்க்கத் தூண்டும்.அனேகமாக ஒரே மாதிரியான பொழுது போக்குகளை வைத்திருப்பவர்கள் நண்பர்களாக அமைவார்கள்.

ஒருவருடய தனித்துவத்தை அவருடய பொழுது போக்கினால் அறியக் கூடியதாக இருக்கலாம்.அத்துடன் மனதைக் கட்டுப்படுத்தி ஒரு விடயத்தில் மட்டும் கவனத்தைச் செலுத்தும் திறனை வளர்க்கக் கூடியதாக இருக்கும்.



ஒரு பொழுது போக்கு உங்களுக்குப் பிடித்தமானதாக அமைந்து விட்டால் எப்பொழுதும் சலிப்பற்ற வாழ்க்கை வாழ்ந்து விடலாம்.

எனது பொழுது போக்கு சித்திரம் வரைதலாகும்.

சர்வாம்பிகா.சுபாங்கன்
ஆண்டு 9+

(12.03.2011 அன்று வகுப்பு வேலைக்காகப் பேச்சாகச் சமர்ப்பிக்கப் பட்ட ஒப்படை)


No comments:

Post a Comment