Tuesday, June 14, 2011

யூதர்களின் கொண்டாட்டம்


சிந்தூரா; வணக்கம் அணிக்கா!

அணிக்கா; வணக்கம் சிந்தூரா.

சிந்தூரா; நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

அணிக்கா: நான் சுகமாக இருக்கிறேன்.உங்கள் சுகம் எப்படி சிந்தூரா?

சிந்தூரா; நான் நல்ல சுகமாக இருக்கிறேன்.நீங்கள் யூத இனத்தைச் சேர்ந்தவர் என்று கேள்விப்பட்டேன். அது உண்மை தானே?

அணிக்கா: ஆமாம். சரி தான்.

சிந்தூரா; நீங்கள் கார்த்திகை, மார்கழி மாதம் மட்டில் கொண்டாடும் பெரு நாளின் பெயர் என்ன?

அணிக்கா: இந்தப் பெரு நாளை நாங்கள் ஹனுக்கா(HANUKKAH)என்று கூறுவோம்.இதைத் தீபங்களின் பெருநாள்( FESTIVAL OF LIGHT) என்று சொல்வார்கள்.

சிந்தூரா; இதை நீங்கள் எத்தனை நாட்களுக்குக் கொண்டாடுவீர்கள்?

அணிக்கா: நாங்கள் இத் திருநாளை எட்டு நாட்களும் இரவுகளும் கொண்டாடுவோம்.இந்தக் கொண்டாட்டத்தின் நோக்கம் எமது(யூதர்களின்) ஜெருசலத்தில் இருக்கும் தேவாலயத்தை மீண்டும் அர்ப்பணித்தமையாகும்.

சிந்தூரா; அது ஏன் அப்படி நடக்க வேண்டி இருந்தது?

அணிக்கா: இதற்குப் பின்னால் ஒரு கதை உண்டு.நடந்த சம்பவத்தைச் சொல்கிறேன்.முன்பு ஒரு காலத்தில் கிரேக்கர்கள் இங்கு வந்து எமது நாட்டைக் கைப்பற்றி எமது மக்கள் எல்லோரையும் அவர்களது மதத்திற்கு மாற்றுவதற்குத் தெண்டித்தார்கள். இதனால் அவர்கள் யூதர்களின் தேவாலையங்களை தமது கடவுள் இருக்கும் ஆலயங்களாக மாற்றினார்கள்.இந்த ஜிருசலத்தில் இருக்கும் ஆலயம் அவர்கள் வழிபடும் ‘சியுஸ்’(ZEUS) வதியும் ஆலயமாக மாற்றினார்கள்.எங்கள் எல்லோரையும் அவர்களுடய கடவுளை வணங்கச் செய்து, எம்மைப் பன்றி இறைச்சியையும் சாப்பிடச் செய்தார்கள்.

இதைப் பார்த்துத் துன்பப் பட்ட எமது சமுதாயத்தைச் சேர்ந்த சில முதியோர்கள் யூதர்களாகிய நாம் இப்படிச் செய்ய ஏலாது என்று சொல்லி அவர்களுடன் சண்டை புரிந்தார்கள்.எத்தனையோ கிரேக்கப் போர் வீரர்களைக் கொன்ற பின்பு அவர்களைக் கலைத்து விட்டு எமது சொந்தக் காணிகள்,ஆலயங்கள் ஆகியவற்றை மீண்டும் கைப்பற்றினார்கள்.

அதன் பின் இந்த ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் முகமாக எண்னை விளக்குகளை எட்டு நாட்களுக்கு எரித்தார்கள்.ஆனால் அங்கே உள்ள மெழுகுவர்த்திகள் வழமையாக ஒரு நாளுக்கு மட்டுமே எரிவதுண்டு.ஆனால் அவர்களுக்கு எட்டு நாட்களுக்கு எரிந்தன.இந்த அதிசயமான சம்பவத்தையே ஒவ்வொரு வருடமும் தீபப் பெருநாளாகக் கொண்டாடுகிறோம்.

சிந்தூரா; சரி,இது ஒரு அக்கறையூட்டும் கதை.இந்தக் கொண்டாட்டங்கள் நடக்கும் போது நீங்கள் செய்யும் வழமைகள் என்ன?

அணிக்கா;நாங்கள் ஒவ்வொரு வருடமும் இந்தக் கொண்டாட்டங்கள் நடக்கும் போது எட்டு நாட்களுக்கு மெழுகுவர்த்திகள் எரிப்போம்.முதலாம் நாள் ஒரு மெழுகுவர்த்தி,இரண்டாம் நாள் இரண்டு,மூன்றாம் நாள் மூன்று மெழுகுவர்த்திகள் அப்படி.எல்லாமாக ஒன்பது திரிகள் எரிப்போம்.

இவைகள் எரிக்கும் இடம் ஹணுக்கியா (HANUKKIYAH) என்ற ஓரு நிலயமாகும்.இந்த மெழுகுவர்த்திகளை ஒவ்வொரு நாளும் அரை மணி நேரமாவது எரிக்க வேண்டும்.பின்னேரம் இருண்ட பின்புதான் எரிப்போம்.விசேட பிரார்த்தனைகளும் செய்வோம்.

சிந்தூரா; வேறென்னென்ன வழக்கங்கள் நடைபெறும்?

அணிக்கா: நாங்கள் எண்ணையில் சுட்ட பலகாரங்கள்,உணவு வகைகள்,கேக்குகள் முதலிய தின்பண்டங்களை இந்த ஒன்பது நாளும் உண்போம்.இது எண்ணையின் அதிசயத்தைக் கொண்டாடும் பெருநாளாகி விட்டது.நாம் இத்துடன் எமது தாய் மொழியில் பாட்டுக்களும் பாடி சிறார்களுக்குப் பெரியோர்கள் பல அன்பளிப்புக்களையும் ஒவ்வொரு நாளும் கொடுப்பார்கள்.


சிந்தூரா; அப்படியா? எனக்கும் அது கிடைக்க வேண்டும் என ஆசையாக இருக்கிறது.நீங்கள் எனக்கு உங்கள் Hanukkah festival பற்றி விளங்கப் படுத்தியதற்கு மிகவும் நன்றி.

அணிக்கா: சரி,சரி,மிக்க சந்தோஷம்.மீண்டும் சந்திப்போம். Bye!

சிந்தூரா; Bye.

சிந்தூரா சபாநாயகம்.
ஆண்டு 9+

18.06.2011

தவணை2 பரீட்சைக்கான ஒப்படை;உலகப் பண்பாடு;சக நண்பருடனான நேர்காணல்

Monday, June 13, 2011

கொரியக் கொண்டாட்டங்கள்


ஆர்த்தி; கொரியர்களின் பாரம்பரியக் கொண்டாட்டம் ஒன்றைக் கூறுக?

ISABEL;DANO கொண்டாட்டம்/SURIT - NAL; a Sprtng Festival.

ஆர்த்தி; எப்பொழுது இந்தக் கொண்டாட்டம் நடக்கும்?

ISABEL:இந்தக் கொண்டாட்டம் கொரியர்களின் சந்திர பஞ்சாங்கத்தில் ஐந்தாம் மாதத்தில் ஐந்தாம் நாளில் வரும்.

ஆர்த்தி; இந்தக் கொண்டாட்டம் எதற்காகக் கொண்டாடப் படுகிறது?

ISABEL; இது சமயச் சடங்ககை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் நிகழ்ச்சி.ஆரம்பத்தில் இந்தக் கொண்டாட்டம் வான் கடவுளை தானியம் விதைக்கும் கால முடிவின் போது வணங்குவதற்குக் கொண்டாடப் பட்டது.

ஆர்த்தி; இந்த நாளில் நீங்கள் கடைப்பிடிக்கும் வழக்கங்கள் என்ன?

ISABEL; பெண்கள் தங்களது தலை முடியை புனித நீரால் கழுவுவார்கள்.இந்த நாளில் எல்லோரும் சிவப்பு,நீல நிற ஆடைகளை அணிவார்கள்.இந்த நாளில் சமைக்கும் உணவு அரிசிப் பலகாரமாகும்.

ISABEL; இந்த நாளில் பெண்கள் விளையாடும் விளையாட்டு ஊஞ்சல் ஆட்டம்.ஆண்கள் விளையாடும் விளையாட்டு SSIREUM. SSIREUM ஒரு மல்லுக் கட்டு விளையாட்டு.இந்த நாளில் கை விசிறிகள் பரிசாகக் கொடுக்கப் படும்.

ஆர்த்தி; இன்னொரு பாரம்பரியக் கொரியக் கொண்டாட்டத்தைப் பற்றிக் கூற முடியுமா?

ISABEL; CHUSEOK,இது ஒரு பெரிய அறுவடைக் கொண்டாட்டம்.இந்தக் கொண்டாட்டத்தின் போது கொரிய நாட்டில் மூன்று நாட்கள் விடுமுறை விடப் படும்.இது சந்திர பஞ்சாங்கத்தில் எட்டாம் மாதத்தின் பதினைந்தாம் நாள் கொண்டாடப் படுகிறது.

ஆர்த்தி; இந்த நாளில் என்ன நடக்கும்?


ISABEL; மக்கள் காலையில் மூதாதையரை வணங்குவர்.இந்த நாளில் உண்ணுகின்ற பிரதான உணவுகள் அரிசிப் பலகாரமும் பழவகைகளும் ஆகும்.இந்த நாளில் கொரியாவில் ஒரு சிலர் மாடுகள் போலவும் ஆமைகள் போலவும் வேடமிட்டு இசைக் கருவிகளை இசைத்த படி வீடு வீடாகச் செல்வார்கள்.

ஆர்த்தி.கணேசமூர்த்தி
ஆண்டு 9+

தவணை2 பரீட்சைக்கான ஒப்படை;உலகப் பண்பாடு;சக நண்பருடனான நேர்காணல்

18.06.2011

Sunday, June 12, 2011

சீனப் புது வருடம்




எனது நண்பர் சீன இனத்தவர். அவரின் பெயர் டேவிட் சென்.அவரும் அவரது குடும்பத்தினரும் சீன மொழியை நன்றாகப் பேசுவார்கள்.அவர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடுவார்கள்.அவற்ருள் சீனப் புது வருடம் மிகவும் முக்கியமானது.

சீனக் கூதிர் காலத்தின் குறுகிய பகல் நாளுக்குப் பின்னர் வரும் அமாவாசையில் இருந்து வரும் இரண்டாம் நாளே சீனப் புது வருடமாகக் கொண்டாடப் படுகிறது.இந்த நாள் பொதுவாக தை 21ம் திகதிக்கும் மாசி 20ம் திகதிக்கும் இடைப்பட்ட ஒரு நாளில் வரும்.இந்த வருடம் சீனப் புது வருடம் மாசி மாதம் 3ம் திகதி இடம் பெற்றது.வருகிற வருடம் இது தை மாதம் 23ம் திகதி இடம் பெறும்.

சீனப் புது வருடம் சீனாவிலும் உலகம் பூராகவும் சீனர்கள் பெருமளவில் வாழும் நாடுகளிலும் கொண்டாடப் படுகிறது.சீனாவிற்கு வெளியே ஹொங்கொங், தீபெத்து,மலேஷியா, சிங்கப்பூர், தாய்வான்,தாய்லாந்து ஆகிய நாடுகளில் வெகு விமர்சையாகக் கொண்டாடப் படுகிறது.

சீனப் புது வருடம் 15 நாட்கள் கொண்டாடப் படுகிறது.புது வருடத்துக்கு முன்னர் மக்கள் வீடுகளைச் சுத்தம் செய்வார்கள்.சிலர் கதவுகளுக்குச் சிவப்பு வர்ணம் பூசுவார்கள்.சிவப்பு நிற விளக்குகளைத் தொங்க விடுவார்கள்.புது வருடத்துக்கு முந்திய இரவு ஒவ்வொரு குடும்பமும் ஒன்று சேர்ந்து விசேட உணவு உட்கொள்ளுவார்கள்.இதில் மீன் உணவும் இடம் பெறும்.

புது வருடத்தின் முதல் நாள் குடும்பங்கள் வயது மூத்தவர்களின் வீடுகளுக்கு முக்கியமாகத் தாத்தா,பாட்டி ஆகியோரின் வீடுகளுக்குச் செல்வார்கள்.பலர் இந் நாளில் இறைச்சிஉண்பதைத் தவிர்ப்பார்கள்.மாலையில் பட்டாசு கொழுத்துவார்கள்.குடும்ப உறுப்பினர் பணம் உள்ள சிவப்பு உறைகளைக் கைமாறுவர்.சிவப்பு உடைகளை அணிவர்.

தொடர்ந்து வரும் நாட்களில் உறவினர், நண்பர் வீடுகளுக்குச் சென்று விருந்து உண்பர்.சீனப் புது வருடக் கொண்டாட்டத்தின் இறுதி நாள் விளக்கு விழா கொண்டாடப் படும்.இதில் பிரபலமான ட்றாகன் நடனமும் இடம் பெறும்.


சீனப் புது வருடம் கூதிர்கால நிறைவைக் குறிப்பதற்காகக் கொண்டாடப் படுகிறது.இந்தக் கொண்டாட்டத்தின் பல நிகழ்வுகள் தூய எண்ணங்களை விளக்குவதாக அமைகின்றன.சீனர்கள் சிவப்பு நிறமும் பட்டாசு வெடிப்பதும் தீய நினைவுகளைப் பயமுறுத்தும் என நம்புகின்றனர்.

கஜனன்.பரமேஸ்வரன்.
ஆண்டு 10.

18.06.2011

தவணை2 பரீட்சைக்கான ஒப்படை;உலகப் பண்பாடு;சக நண்பருடனான நேர்காணல்


Friday, June 10, 2011

இஸ்லாமியக் கொண்டாட்டம்



முஸ்லீம் மக்கள் ஒவ்வொரு வருடமும் ரமடான் கொண்டாடுவினம்.ஒரு மாதத்துக்கு சூரியன் வரமுதல் சாப்பிட வேண்டும்.சூரியன் வரும் போது எதுவும் சாப்பிடக் கூடாது.தண்னீர் குடிக்கக் கூடாது.அதை மீறிச் சாப்பிட்டீர்கள் என்றால் 60 நாட்களுக்கு விரதம் இருக்க வேண்டும்.சூரியன் போகும் போது சாப்பிடலாம்.

ரமடான் நடக்கும் போது சண்டை பிடிக்கக் கூடாது.மற்ரவர்களுக்குக் கெடுதல் பண்னக் கூடாது.முஸ்லீம் ஆக்கள் சந்திரன் கலண்டரைப் பார்த்து ரமடான் தொடங்குவார்கள்.ஒவ்வொரு வருடமும் ரமடான் ஒவ்வொரு நாளில் வரும்.(Good for your digestive system.poor people don't get to eat)

ஒவ்வொரு நாளும் 5 prayers செய்ய வேண்டும்.பெண்கள் வருத்தமாக இருந்தால் அடுத்த மாதம் விரதம் இருக்க வேண்டும்.வருத்தமாக இருக்கும் பொழுது சாமி கும்பிடக் கூடாது.சாமி கும்பிடும் போது நகத்தில் nail polish இருக்கக் கூடாது.


30 இல்லாட்டி 31 நாட்களுக்குப் பிறகு முஸ்லீம் மக்கள் ஈட்(eed)கொண்டாடுவினம். விருந்து வச்சுச் சாப்பிடுவினம்.

By; பிருந்தா.தேவராஜா.
Information by; Tooba moosani.

ஆண்டு 9+

18.06.2011

தவணை2 பரீட்சைக்கான ஒப்படை;உலகப் பண்பாடு;சக நண்பருடனான நேர்காணல்