Saturday, April 9, 2011

கணணியும் கையடக்கத் தொலைபேசியும்


விஞ்ஞானக் கண்டு பிடிப்புகள் மனைத குலத்தின் முன்னேற்றத்துக்கு பலவழிகளில் உதவுகின்றன.இவற்றில் சில தொலைபேசியும் (Telephone) கணணியும்(computer).தலைமுறை ஒன்று(Generation one), தலைமுறை இரண்டு(Generation two), தலைமுறை மூன்று(Generation three)எனப் பல தலைமுறைகளைக் கண்டது இந்தக் கணணியும் தொலைபேசியும்.

ஆரம்பத்தில் பெரிய கருவிகலாக இருந்தவை தற்போது மிகச் சிறிது சிறிதாகி கணணிகள் மடியில் வைத்துப் பாவிக்கக் கூடியதாக மிகச் சிறிய அளவிலும் தொலைபேசிகள் தற்போது சட்டைப் பைக்குள் வைக்கக் கூடியதாகவும் சிறுத்து விட்டன.(initially,computers were big but now we have laptops and things like iphones that we can take around and fit into our pockets.)

இவற்றின் உபயோகங்கள் பல.அவற்ரில் சிலவற்றை மட்டும் நான் இங்கே சொல்லப் போகிறேன்.

ஊர் விட்டு ஊர்,நாடு விட்டு நாடு தொடர்புகளைப் பேணுதல்,வியாபாரம் செய்தல்,அவசர தேவைகளுக்குத் தொடர்பு கொள்ளல் போன்ற பல நன்மைகள் இவற்றால் உண்டு.கணணிகள் மிகப் பெரிய கணிப்புகளை மிகச் சொற்ப நேரத்தில் செய்யக் கூடியவை.(computers provide communication between different countries and different cites, which helps business and can be used for emergency contact)

கணணியின் உதவியின்றி தற்காலத்தில் வங்கிகலில் கணக்கை நடத்த முடியாத நிலை காணப்படுகிறது.கணணி சரியாக வேலை செய்யாததால் வங்கியில் வைத்த பணத்தை மக்கள் எடுக்க முடியாமல் திண்டாடிய செய்திகளை அவ்வளவு எளிதாக யார் தான் மறந்து விடுவார்கள்? (without the use of computers, nowadays, banks can't run)

இவற்றால் விளையும் தீமைகள் தான் என்ன?

கையடக்கத் தொலைபேசி இல்லாவிட்டால் எம்மில் பலருக்கு வாழ்க்கையே ஓடாது.ஏன் பொழுதே விடியாது என்றால் மிகையாகாது.வாகனங்கள் ஓட்டும் போது கையடக்கத் தொலைபேசியைப் பாவிப்பதால் ஏற்படும் விபத்துக்களைப் பற்றிய செய்திகள் வருவது நீங்கள் அறிந்ததே!(people can't manage without their mobile phones for even one day.)

கையக்கத் தொலைபேசியில் இருந்து வரும் மின்னியல் கதிர்கள் மூளைக்காச்சல் மற்ரும் மூளைப் புற்றுநோய் போன்ற பல வருத்தங்களுக்குக் காரணம் என நம்பப் படுகிறது.கணணியிலும் இணையத்திலும் Facebook,Twitter,MSN போன்ற பல இணையத் தளங்களை திரும்பத் திரும்பப் பாவிப்பவர்கள் இதற்கு அடிமைப்படுவதாக சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.அது மட்டுமல்லாமல் அதிக கணணி, இணையப் பாவனை தூக்கத்தியும் கண்பார்வையையும் கெடுத்து பாவிப்பவரை நாளடைவில் நோயாளியாக்கியும் விடுகிறது.



‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்ற பழமொழி ஞாபகத்துக்கு வருகிறதா உங்களுக்கு? கணணியையும் கையடக்கத் தொலைபேசியையும் அளவோடு பாவிக்க வேண்டும்.(mobile phones can cause brain damage)

ஆர்த்தி. கணேசமூர்த்தி.
ஆண்டு 9+


(12.03.2011 அன்று வகுப்பு வேலைக்காக பேச்சாகச் சமர்ப்பிக்கப் பட்ட ஒப்படை)

No comments:

Post a Comment