Sunday, April 10, 2011

காட்டுத் தீ - 2009


சமூகம்;

சனிக்கிழமை 7ம் நாள் மாசி மாதம் 2009ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய மக்கள் கறுப்பு தினமாக நினைவு கூர வேண்டிய நாளாகும்.அவுஸ்திரேலிய வரலாற்ரிலேயே மிகவும் இருண்ட நாட்களில் இதுவும் ஒன்றாகும்.விக்ரோரிய மாநிலத்தில் நடந்த காட்டுத் தீயை அவுஸ்திரேலிய மக்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.

இந்தக் காட்டுத் தீ நிலத்தின் தோற்ரத்தையே மாற்ரி அமைத்தது மட்டும் அல்லாமல் மக்கள் இன்னொரு காட்டுத் தீயைப் பற்றி நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு மிகவும் கொடூரமானதாகவும் அது இருந்தது.

இந்தக் காட்டுத் தீயினால் 173க்கும் அதிகமான மக்கள் இறந்தார்கள்.1700க்கும் அதிகமான வீடுகள் அழிந்தன.7000 மக்கள் வீட்டை இழந்தார்கள்.

தொழிற்சாலை;

காட்டுத் தீயினால் விக்ரோரிய மாநிலத்தில் திராட்சை பயிரிடப்பட்ட இடங்கள் மிகவும் பாரிய பாதிப்புக்குள்ளானது.மேலும் 2000 கட்டிடங்கள் முழுவதுமாக தரைமட்டமானது.1400க்கும் அதிகமான கட்டிடங்கள் சேதமடைந்தன.55க்கும் அதிகமான வியாபாரத்தலங்கள், 3 பாடசாலைகள், மற்றும் 3 குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள் ஆகியவை முற்றிலுமாகப் பாதிப்புக்குள்ளாயின.

விவசாயம்;

4,30,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட செடிகளும் பயிர்களும் காட்டுத்தீயால் முழுவதுமாக அழிந்தது.11,000 க்கும் அதிகமான பண்னை விலங்குகளிறந்தும் காயமும் அடைந்தன.



இந்தக் காட்டுத்தீயினால் விவசாயத்துக்குத் தேவையான பொருட்கள்,விவசாய உதிரிப்பாகங்கல் ஆகியனவும் சேதமடைந்தன.இது மிகவும் விவசாயிகளுக்குப் போதாத காலமாகும்.இந்தப் பாதிப்பில் இருந்து அவர்கள் இயல்பான நிலைக்கு வந்தாலும் அவர்களுடய பாத்திக்கப் பட்ட நிலங்களில் விவசாயம் செய்து மீண்டும் பழைய நிலைக்கு வருவதற்கு அவர்கள் சில காலம் காத்திருக்க வேண்டும்.

பிருந்தா தேவராஜா.
ஆண்டு 9+

(12.03.2011 அன்று வகுப்பு வேலைக்காகப் பேச்சாக சமர்ப்பிக்கப் பட்ட கட்டுரை)

No comments:

Post a Comment