கடந்த மார்கழி,தைமாத பாடசாலை விடுமுறையின் போது, நானும் என் குடும்பத்தினரும் இலங்கை சென்று இருந்தோம்.நாங்கள் கொழும்பு நகரில் சில வாரங்கள் தங்கி இருந்த போது, சில நாட்களுக்கு கண்டிக்கு அண்மையில் இருக்கும் உல்லாசப் பிரயாணிகள் செல்லும் இடங்களுக்குச் சென்றோம்.
நாங்கள் முதலாவதாகச் சென்றது ‘பின்னவல’என்ற இடத்தில் இருக்கும் அநாதை யானைகள் சாலை.(யானைகள் சரனாலையம்).(ஆங்கிலத்தில் Elephant Orphanage என்று சொல்வார்கள்) இங்கு சிறிய,பெரிய யானைகள்,குருட்டு யானைகள்,பெற்றோரை இழந்த யானைக்குட்டிகள் மற்றும் பலவிதமான யானைகள், காட்டில் தங்கள் பாட்டில் வசிக்க முடியாத நிலையில் இருப்பதைக் காணலாம்.இவற்றைக் கவனமாக உணவு, பால் கொடுத்து அக்கறையுடன் பார்த்து விடுவார்கள்.
நான் ஒரு சிறிய யானைக்குட்டிக்கு ஒரு சின்னப் போத்தலில் பால் கொடுத்தேன்.அந்த யானைக்குட்டி எனக்குக் கிட்டே வந்து வாயைத் திறந்து போத்தலில் உள்ள பாலை உறிஞ்சிக் குடித்தது.அதிகமான உல்லாசப் பிரயாணிகள் இங்கே போய் இங்குள்ள யானைகளுக்கு வாழைப்பழம் கொடுத்து அவற்றின் அருகில் நின்று புகைப்படம் எடுப்பார்கள்.இங்கே நான் என் தங்கையுடன் யானையில் ஏறி சவாரி செய்தேன்.வெவ்வேறு நேரங்களில் இங்குள்ள யானைகள் வித்தியாசமான நடவெடிக்கைகளில் ஈடுபடுவதைக் கானலாம்.காலை பத்து மணிக்கு இந்த யானைகளைக் கூட்டிச் சென்று ஆற்றில் குளிக்க விடுவார்கள்.
இவ்விடத்தில் பல souvenir கடைகள் அழகான பொருட்களை விற்பனை செய்கின்றன.நான் ஒரு கடைக்குள் போய் பார்த்தேன்.அங்கே அவர்கள் யானைகளின் சாணியைப் பாவித்து எப்படி கடதாசி செய்யலாம் என்று காட்டினார்கள்.பட கடதாசிப் பொருட்களும் விற்பனைக்கு இருந்தன.

நாங்கள் எல்லோரும் இப்பாறையச் சுற்றியுள்ள படிகளில் ஏறி மேலே உள்ள அரண்மனைக்குப் போனோம்.மொத்தமாக ஆயிரத்து இருநூறு (1200)படிகள் ஏறினோம்.ஏறத்தாள எண்ணூறு படிகள் ஏறிய பின் இந்த அரண்மனையின் வாசலைக் காணலாம்.இந்த வாசல் ஒரு சிங்கத்தின் வாயைப் போன்று இருந்தது.சில நூற்றாண்டுக்கு முன் முழுதாக ஒரு சிங்கத்தின் தலையாக இருந்து, பின்பு கற்கள் உடைந்து விழுந்து விட்டன.தற்போது இந்த வாசலில் சிங்கத்தின் பாதங்கள் மட்டும் இன்னும் இருக்கின்றன.
அடுத்ததாக நாங்கள் தம்புள்ள என்ற இடத்தில் உள்ள rock cave temple க்குப் போனோம்.இது ஒரு பாறையில் ஐந்து குகைக்குள் அமைந்திருக்கும் ஒரு புத்தர் கோயில். இதற்குள் பலவகையான புத்தர் சிலைகள் அழகான ஓவியங்கள் முதலியவற்ரைக் காணலாம்.இந்தக் குகைக்குள் சிலைகளில் விஷ்னுவின் சிலையும் பிள்ளையாரின் சிலையும் இருக்கின்றன.இங்குள்ள ஓவியங்கள் புத்தரின் வாழ்க்கைக் கதையை படங்கள் மூலம் கூறுகின்றன.
இந்தக் கோயிலை தம்புள்ள பொற்கோயில் என்றும் சொல்வார்கள்.இங்கே சுமார் முந்நூறு படிகள் ஏற வேண்டும்.இந்தக் கோயிலுக்குள் ஒரு பெரிய கிண்ணம் ஒன்று குகைகளின் மேல் இருந்து ஒழுகி வரும் தண்ணீரை ஏந்திக் கொண்டிருக்கிறது.அற்புதமாக இது ஒரு பொழுதும் வழிந்து விடாது நிறைவாகவே இருக்கும்.தண்ணீரும் எப்பொழுதும் குகையில் இருந்து ஒழுகிக் கொண்டே இருக்கும்.
நாங்கள் கடசியில் பேராதனையில் உள்ள பூங்காவிற்கும் மாத்தளைக்கும் சென்றோம்.
அடுத்த முறை நான் இலங்கைக்குப் போகும் பொழுது எனக்கு மலைப் பிரதேசத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்கள்,நுவரெலியா,கம்பளை போன்ற இடங்களுக்குப் போய் பார்க்க விருப்பம்.
மாணவி சிந்தூரா.சபாநாயகம்
ஆண்டு 9+
12.03.2011 தன் வகுப்பு வேலைக்காக ,மேடைப் பேச்சாகச் சமர்ப்பிக்கப் பட்ட ஒப்படை)
Interesting places in Sri Lanka I've never heard before!! :))
ReplyDeleteMajoory Jeyakumar