Tuesday, June 14, 2011

யூதர்களின் கொண்டாட்டம்


சிந்தூரா; வணக்கம் அணிக்கா!

அணிக்கா; வணக்கம் சிந்தூரா.

சிந்தூரா; நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

அணிக்கா: நான் சுகமாக இருக்கிறேன்.உங்கள் சுகம் எப்படி சிந்தூரா?

சிந்தூரா; நான் நல்ல சுகமாக இருக்கிறேன்.நீங்கள் யூத இனத்தைச் சேர்ந்தவர் என்று கேள்விப்பட்டேன். அது உண்மை தானே?

அணிக்கா: ஆமாம். சரி தான்.

சிந்தூரா; நீங்கள் கார்த்திகை, மார்கழி மாதம் மட்டில் கொண்டாடும் பெரு நாளின் பெயர் என்ன?

அணிக்கா: இந்தப் பெரு நாளை நாங்கள் ஹனுக்கா(HANUKKAH)என்று கூறுவோம்.இதைத் தீபங்களின் பெருநாள்( FESTIVAL OF LIGHT) என்று சொல்வார்கள்.

சிந்தூரா; இதை நீங்கள் எத்தனை நாட்களுக்குக் கொண்டாடுவீர்கள்?

அணிக்கா: நாங்கள் இத் திருநாளை எட்டு நாட்களும் இரவுகளும் கொண்டாடுவோம்.இந்தக் கொண்டாட்டத்தின் நோக்கம் எமது(யூதர்களின்) ஜெருசலத்தில் இருக்கும் தேவாலயத்தை மீண்டும் அர்ப்பணித்தமையாகும்.

சிந்தூரா; அது ஏன் அப்படி நடக்க வேண்டி இருந்தது?

அணிக்கா: இதற்குப் பின்னால் ஒரு கதை உண்டு.நடந்த சம்பவத்தைச் சொல்கிறேன்.முன்பு ஒரு காலத்தில் கிரேக்கர்கள் இங்கு வந்து எமது நாட்டைக் கைப்பற்றி எமது மக்கள் எல்லோரையும் அவர்களது மதத்திற்கு மாற்றுவதற்குத் தெண்டித்தார்கள். இதனால் அவர்கள் யூதர்களின் தேவாலையங்களை தமது கடவுள் இருக்கும் ஆலயங்களாக மாற்றினார்கள்.இந்த ஜிருசலத்தில் இருக்கும் ஆலயம் அவர்கள் வழிபடும் ‘சியுஸ்’(ZEUS) வதியும் ஆலயமாக மாற்றினார்கள்.எங்கள் எல்லோரையும் அவர்களுடய கடவுளை வணங்கச் செய்து, எம்மைப் பன்றி இறைச்சியையும் சாப்பிடச் செய்தார்கள்.

இதைப் பார்த்துத் துன்பப் பட்ட எமது சமுதாயத்தைச் சேர்ந்த சில முதியோர்கள் யூதர்களாகிய நாம் இப்படிச் செய்ய ஏலாது என்று சொல்லி அவர்களுடன் சண்டை புரிந்தார்கள்.எத்தனையோ கிரேக்கப் போர் வீரர்களைக் கொன்ற பின்பு அவர்களைக் கலைத்து விட்டு எமது சொந்தக் காணிகள்,ஆலயங்கள் ஆகியவற்றை மீண்டும் கைப்பற்றினார்கள்.

அதன் பின் இந்த ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் முகமாக எண்னை விளக்குகளை எட்டு நாட்களுக்கு எரித்தார்கள்.ஆனால் அங்கே உள்ள மெழுகுவர்த்திகள் வழமையாக ஒரு நாளுக்கு மட்டுமே எரிவதுண்டு.ஆனால் அவர்களுக்கு எட்டு நாட்களுக்கு எரிந்தன.இந்த அதிசயமான சம்பவத்தையே ஒவ்வொரு வருடமும் தீபப் பெருநாளாகக் கொண்டாடுகிறோம்.

சிந்தூரா; சரி,இது ஒரு அக்கறையூட்டும் கதை.இந்தக் கொண்டாட்டங்கள் நடக்கும் போது நீங்கள் செய்யும் வழமைகள் என்ன?

அணிக்கா;நாங்கள் ஒவ்வொரு வருடமும் இந்தக் கொண்டாட்டங்கள் நடக்கும் போது எட்டு நாட்களுக்கு மெழுகுவர்த்திகள் எரிப்போம்.முதலாம் நாள் ஒரு மெழுகுவர்த்தி,இரண்டாம் நாள் இரண்டு,மூன்றாம் நாள் மூன்று மெழுகுவர்த்திகள் அப்படி.எல்லாமாக ஒன்பது திரிகள் எரிப்போம்.

இவைகள் எரிக்கும் இடம் ஹணுக்கியா (HANUKKIYAH) என்ற ஓரு நிலயமாகும்.இந்த மெழுகுவர்த்திகளை ஒவ்வொரு நாளும் அரை மணி நேரமாவது எரிக்க வேண்டும்.பின்னேரம் இருண்ட பின்புதான் எரிப்போம்.விசேட பிரார்த்தனைகளும் செய்வோம்.

சிந்தூரா; வேறென்னென்ன வழக்கங்கள் நடைபெறும்?

அணிக்கா: நாங்கள் எண்ணையில் சுட்ட பலகாரங்கள்,உணவு வகைகள்,கேக்குகள் முதலிய தின்பண்டங்களை இந்த ஒன்பது நாளும் உண்போம்.இது எண்ணையின் அதிசயத்தைக் கொண்டாடும் பெருநாளாகி விட்டது.நாம் இத்துடன் எமது தாய் மொழியில் பாட்டுக்களும் பாடி சிறார்களுக்குப் பெரியோர்கள் பல அன்பளிப்புக்களையும் ஒவ்வொரு நாளும் கொடுப்பார்கள்.


சிந்தூரா; அப்படியா? எனக்கும் அது கிடைக்க வேண்டும் என ஆசையாக இருக்கிறது.நீங்கள் எனக்கு உங்கள் Hanukkah festival பற்றி விளங்கப் படுத்தியதற்கு மிகவும் நன்றி.

அணிக்கா: சரி,சரி,மிக்க சந்தோஷம்.மீண்டும் சந்திப்போம். Bye!

சிந்தூரா; Bye.

சிந்தூரா சபாநாயகம்.
ஆண்டு 9+

18.06.2011

தவணை2 பரீட்சைக்கான ஒப்படை;உலகப் பண்பாடு;சக நண்பருடனான நேர்காணல்

2 comments:

  1. First time I heard about Jews Hanukkah festival. Very nicely written. Well done Sinthura.

    Merlyn Jesuratnam

    ReplyDelete
  2. எங்க‌ ஊர் தீப‌த் திருநாள், ம‌ற்றும் நவ‌ராத்திரி ப‌ண்டிகைக‌ளின் ம‌ற்றொரு ப‌ரிமாண‌மாய் இப்ப‌திவின் செய்திக‌ள் உருவ‌க‌மாகின்ற‌ன‌. ம‌னித‌ர்க‌ள், ம‌த‌ங்க‌ள் யாவ‌ற்றையும் இணைக்கும் க‌ண்ணுக்குத் தெரியாத‌ நுண்ணிய‌ இழை வெளிப்ப‌டும் ச‌ம‌ய‌ங்க‌ளில் தோன்றும் விய‌ப்பிற்கு அள‌வில்லை. இள‌ம் சிறார்க‌ளின் ப‌திவுல‌க‌ பிர‌வேச‌ம் ம‌கிழ்வ‌ளிக்கிற‌து. முனைப்புட‌ன் முன்னின்று வ‌ழிந‌ட‌த்தும் தோழி ய‌சோதா ப‌த்ம‌நாப‌னுக்கு வாழ்த்தும் ந‌ன்றியும்.

    ReplyDelete