Monday, June 13, 2011

கொரியக் கொண்டாட்டங்கள்


ஆர்த்தி; கொரியர்களின் பாரம்பரியக் கொண்டாட்டம் ஒன்றைக் கூறுக?

ISABEL;DANO கொண்டாட்டம்/SURIT - NAL; a Sprtng Festival.

ஆர்த்தி; எப்பொழுது இந்தக் கொண்டாட்டம் நடக்கும்?

ISABEL:இந்தக் கொண்டாட்டம் கொரியர்களின் சந்திர பஞ்சாங்கத்தில் ஐந்தாம் மாதத்தில் ஐந்தாம் நாளில் வரும்.

ஆர்த்தி; இந்தக் கொண்டாட்டம் எதற்காகக் கொண்டாடப் படுகிறது?

ISABEL; இது சமயச் சடங்ககை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் நிகழ்ச்சி.ஆரம்பத்தில் இந்தக் கொண்டாட்டம் வான் கடவுளை தானியம் விதைக்கும் கால முடிவின் போது வணங்குவதற்குக் கொண்டாடப் பட்டது.

ஆர்த்தி; இந்த நாளில் நீங்கள் கடைப்பிடிக்கும் வழக்கங்கள் என்ன?

ISABEL; பெண்கள் தங்களது தலை முடியை புனித நீரால் கழுவுவார்கள்.இந்த நாளில் எல்லோரும் சிவப்பு,நீல நிற ஆடைகளை அணிவார்கள்.இந்த நாளில் சமைக்கும் உணவு அரிசிப் பலகாரமாகும்.

ISABEL; இந்த நாளில் பெண்கள் விளையாடும் விளையாட்டு ஊஞ்சல் ஆட்டம்.ஆண்கள் விளையாடும் விளையாட்டு SSIREUM. SSIREUM ஒரு மல்லுக் கட்டு விளையாட்டு.இந்த நாளில் கை விசிறிகள் பரிசாகக் கொடுக்கப் படும்.

ஆர்த்தி; இன்னொரு பாரம்பரியக் கொரியக் கொண்டாட்டத்தைப் பற்றிக் கூற முடியுமா?

ISABEL; CHUSEOK,இது ஒரு பெரிய அறுவடைக் கொண்டாட்டம்.இந்தக் கொண்டாட்டத்தின் போது கொரிய நாட்டில் மூன்று நாட்கள் விடுமுறை விடப் படும்.இது சந்திர பஞ்சாங்கத்தில் எட்டாம் மாதத்தின் பதினைந்தாம் நாள் கொண்டாடப் படுகிறது.

ஆர்த்தி; இந்த நாளில் என்ன நடக்கும்?


ISABEL; மக்கள் காலையில் மூதாதையரை வணங்குவர்.இந்த நாளில் உண்ணுகின்ற பிரதான உணவுகள் அரிசிப் பலகாரமும் பழவகைகளும் ஆகும்.இந்த நாளில் கொரியாவில் ஒரு சிலர் மாடுகள் போலவும் ஆமைகள் போலவும் வேடமிட்டு இசைக் கருவிகளை இசைத்த படி வீடு வீடாகச் செல்வார்கள்.

ஆர்த்தி.கணேசமூர்த்தி
ஆண்டு 9+

தவணை2 பரீட்சைக்கான ஒப்படை;உலகப் பண்பாடு;சக நண்பருடனான நேர்காணல்

18.06.2011

1 comment:

  1. இதே போல் இந்தியாவின் த‌மிழ்நாட்டிலும் விதைக்க‌ வ‌ய‌ல்க‌ளைப் ப‌த‌ப்ப‌டுத்தும் த‌மிழ் ஆண்டின் நான்காவ‌து மாத‌மான‌ ஆடி மாத‌த்தில் 'ஆடிப்பெருக்கு'ம், அறுவ‌டையாகும் 'தை' மாத‌த்தில் (ஆண்டின் ப‌த்தாம் மாத‌த்தில்) பொங்க‌ல் ப‌ண்டிகையென‌(உழ‌வ‌ர் திருநாள்)வும் கொண்டாட‌ப்ப‌டுவ‌தை அறிவாயா ஆர்த்தி க‌னேச‌மூர்த்தி?! அழ‌கிய‌ விப‌ர‌ங்க‌ள‌ட‌ங்கிய‌ ப‌திவுக்கு வாழ்த்துக‌ள்.

    ReplyDelete