Saturday, April 21, 2012

எகிப்திய நாடோடிக் கதை



ஆதி முதல் மனிதன் எப்படி மரணிக்கும் முறையைத் தெரிவு செய்தான் என்ற கதை:

தன் சினேகிதியான Diana.Estafanos இடம் கேட்டு அதனைத் தமிழில் எழுதி இருந்தவர்: அபிராமி.ஸ்ரீகுமார்.

17.03.2012


முதல் இருந்த மனிதனையும் பெண்ணையும் இறைவன் பார்த்து அவர்கள் சந்திரன் போலவா,மரத்தைப் போலவா இறக்க விரும்புவர் எனக் கேட்டார். சந்திரன் ஒவ்வொரு மாதமும் சிறிது சிறிதாகத் தேய்ந்து இறந்து பின் வளர்ந்து மறு வாழ்வு பெறும். மரம் இறந்தால் அதன் வாழ்வு முடிவுறும். ஆனால் மரங்கள் அதன் விதைகளை விட்டுச் செல்லும்.விதைகள் முளைத்து மரங்களின் வாரிசுகளாகும். மனிதர்களும் தமக்கு வாரிசுகளாகப் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது நீண்டகாலம் வாழ்ந்து இறக்கலாம்.


மனிதர்களிடம் அவர்களின் தெரிவு என்னவாகும் என இறைவன் அவர்களிடம் விசாரித்தார். ஆதி மனிதனும் பெண்ணும் சற்று யோசித்த பின் தாம் மரங்களைப் போலவே செய்ய விருப்பம் தெரிவித்தனர். பிள்ளைகளைப் பெற்று அவர்கள் உதவியுடனும் அன்புடன், மகிழ்ச்சியுடன் வாழ்ந்து பின் மரணிக்க விரும்பினர். இறைவன் அவர்களுக்கு விரும்பியதை அளித்தார்.


அவர்களும் பிள்ளைகளைப் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்து மரணித்தனர்.அது முதல் ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து, தன் இடத்தில் மரங்களைப் போலவே தம் பிள்ளைகளை வாரிசுகளாக விட்டுச் செல்லுகின்றனர்.

கேட்டு எழுதியவர்: அபிராமி.ஸ்ரீகுமார்.
ஆண்டு 9 (Non HSC)
17.03.2012

2 comments: