Sunday, June 12, 2011

சீனப் புது வருடம்




எனது நண்பர் சீன இனத்தவர். அவரின் பெயர் டேவிட் சென்.அவரும் அவரது குடும்பத்தினரும் சீன மொழியை நன்றாகப் பேசுவார்கள்.அவர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடுவார்கள்.அவற்ருள் சீனப் புது வருடம் மிகவும் முக்கியமானது.

சீனக் கூதிர் காலத்தின் குறுகிய பகல் நாளுக்குப் பின்னர் வரும் அமாவாசையில் இருந்து வரும் இரண்டாம் நாளே சீனப் புது வருடமாகக் கொண்டாடப் படுகிறது.இந்த நாள் பொதுவாக தை 21ம் திகதிக்கும் மாசி 20ம் திகதிக்கும் இடைப்பட்ட ஒரு நாளில் வரும்.இந்த வருடம் சீனப் புது வருடம் மாசி மாதம் 3ம் திகதி இடம் பெற்றது.வருகிற வருடம் இது தை மாதம் 23ம் திகதி இடம் பெறும்.

சீனப் புது வருடம் சீனாவிலும் உலகம் பூராகவும் சீனர்கள் பெருமளவில் வாழும் நாடுகளிலும் கொண்டாடப் படுகிறது.சீனாவிற்கு வெளியே ஹொங்கொங், தீபெத்து,மலேஷியா, சிங்கப்பூர், தாய்வான்,தாய்லாந்து ஆகிய நாடுகளில் வெகு விமர்சையாகக் கொண்டாடப் படுகிறது.

சீனப் புது வருடம் 15 நாட்கள் கொண்டாடப் படுகிறது.புது வருடத்துக்கு முன்னர் மக்கள் வீடுகளைச் சுத்தம் செய்வார்கள்.சிலர் கதவுகளுக்குச் சிவப்பு வர்ணம் பூசுவார்கள்.சிவப்பு நிற விளக்குகளைத் தொங்க விடுவார்கள்.புது வருடத்துக்கு முந்திய இரவு ஒவ்வொரு குடும்பமும் ஒன்று சேர்ந்து விசேட உணவு உட்கொள்ளுவார்கள்.இதில் மீன் உணவும் இடம் பெறும்.

புது வருடத்தின் முதல் நாள் குடும்பங்கள் வயது மூத்தவர்களின் வீடுகளுக்கு முக்கியமாகத் தாத்தா,பாட்டி ஆகியோரின் வீடுகளுக்குச் செல்வார்கள்.பலர் இந் நாளில் இறைச்சிஉண்பதைத் தவிர்ப்பார்கள்.மாலையில் பட்டாசு கொழுத்துவார்கள்.குடும்ப உறுப்பினர் பணம் உள்ள சிவப்பு உறைகளைக் கைமாறுவர்.சிவப்பு உடைகளை அணிவர்.

தொடர்ந்து வரும் நாட்களில் உறவினர், நண்பர் வீடுகளுக்குச் சென்று விருந்து உண்பர்.சீனப் புது வருடக் கொண்டாட்டத்தின் இறுதி நாள் விளக்கு விழா கொண்டாடப் படும்.இதில் பிரபலமான ட்றாகன் நடனமும் இடம் பெறும்.


சீனப் புது வருடம் கூதிர்கால நிறைவைக் குறிப்பதற்காகக் கொண்டாடப் படுகிறது.இந்தக் கொண்டாட்டத்தின் பல நிகழ்வுகள் தூய எண்ணங்களை விளக்குவதாக அமைகின்றன.சீனர்கள் சிவப்பு நிறமும் பட்டாசு வெடிப்பதும் தீய நினைவுகளைப் பயமுறுத்தும் என நம்புகின்றனர்.

கஜனன்.பரமேஸ்வரன்.
ஆண்டு 10.

18.06.2011

தவணை2 பரீட்சைக்கான ஒப்படை;உலகப் பண்பாடு;சக நண்பருடனான நேர்காணல்


1 comment:

  1. ந‌ன்றாக‌ இருக்கிற‌து க‌ஜான‌ன‌ன் உங்க‌ ப‌திவு. எல்லா ம‌க்க‌ளும் தின‌ச‌ரி அலுப்பிலிருந்து புத்துண‌ர்வு பெற‌வும், உற‌வுக‌ளை, ப‌ண்பாட்டு வ‌ழ‌க்க‌ங்க‌ளைப் பேண‌வும் ப‌ண்டிகைக‌ளை கொண்டாடி ம‌கிழ்கின்ற‌ன‌ர். தீய‌ ச‌க்திக‌ளை ப‌ட்டாசும் செவ்வாடையும் விர‌ட்டிக் காப்ப‌து போல் ம‌ன‌தின் தீய‌ எண்ண‌ங்க‌ளான அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாசொல் போன்ற‌வ‌ற்றை அன்பு, ப‌ரிவு, க‌னிவு கொண்டு விர‌ட்ட‌ முய‌ல்வோம்.

    ReplyDelete